< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் கடைசிப் பட அறிவிப்பு  நாளை மாலை வெளியாகிறது
சினிமா செய்திகள்

விஜய்யின் கடைசிப் பட அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது

தினத்தந்தி
|
13 Sept 2024 6:44 PM IST

தளபதி 69 படத்தின் அறிவிப்பு நாளை மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் தி கோட். இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசித் திரைப்படம் குறித்த அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் விஜய்யுக்கு சமர்ப்பணமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி படம் என்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், தனது 69-ஆவது படமே கடைசிப் படமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ள நிலையில், அரசியல் அல்லது சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்