தலைவர் 171 : தளபதி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ஷோபனா
|லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் தயாராகும் தலைவர் 171 படத்தின் நாயகியை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் ரஜினியின் கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு சூழப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.
ரஜினிகாந்த் தற்போது ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் தயாராகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன்,பஹத் பாசில், ராணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர்.
நேற்று தான் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு வேட்டையன் வெளியாகவிருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் இப்படம் அக்டோபர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் பிசியாக இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை துவங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். அதன் பிறகு தற்போது ரஜினியின் தலைவர் 171 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகின்றதாம். அந்த வகையில் பிரபல நடிகையான ஷோபனாவை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.
தற்போது ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 -ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து டைட்டில் டீஸருக்கான படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் துவங்கவுள்ளதாம். விக்ரம் மற்றும் லியோ படங்களின் டைட்டில் டீசரை போல தலைவர் 171 டைட்டில் டீசரும் செம மாஸாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தலைவர் 171 திரைப்படம் தன் முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். லோகேஷிற்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் இப்படம் வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என்றே தெரிகின்றது.