தலைநகரம் பட நாயகியா...? வாயடைத்து போன ரசிகர்கள்
|நடிகை ஜோதிர்மயியின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை,
நகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஜோதிர்மயி. அப்படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் வடிவேலு உடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிர்மயிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இதையடுத்து விஜயகாந்த் ஜோடியாக சபரி, ஜீவனுடன் நான் அவன் இல்லை, சத்யராஜ் உடன் பெரியார், சந்தானத்தின் அறை எண் 305-ல் கடவுள் போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு தன்னுடைய முதல் கணவர் நிஷாந்த் குமாரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் ஜோதிர்மயி.
பின்னர் மலையாள இயக்குனர் அமல் நீரத் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு மறுமணம் செய்துகொண்ட ஜோதிர்மயி, தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஜோதிர்மயி, மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது அவரின் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் மேலும் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
அந்த வகையில் தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் நடிகை ஜோதிர்மயி, தலைமுடி முழுவதுமாக நரைத்து வயதானவர் போல காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தலைநகரம் பட நாயகியா இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார் என வாயடைத்துப் போய் உள்ளனர். ஜோதிர்மயி-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.