நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
|நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும் . நடிகர் , நடிகைகளின் சம்பளம் குறித்து முடிவெடுக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும். நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும், நடிகர், நடிகைகளின் சம்பளத்தை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்க திட்டம் எடுக்க பட உள்ளதாக கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 16 முதல் புதிய படத்திற்கு பூஜை போடக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளனர். பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கியுள்ளதால் புதிய படத்திற்கு பூஜை போடக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளனர்.
இதனால் தமிழ் சினிமா துறையில் சில மாற்றங்களும் , நடிகர்கள் மற்றும் டெக்னிஷியங்களின் ஊதியம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.