தெலுங்கு பட வாய்ப்புகள்: சமுத்திரக்கனி மகிழ்ச்சி...!
|டைரக்டர் சமுத்திரக்கனிக்கு தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார்
டைரக்டர் சமுத்திரக்கனி தமிழில் பிஸியான நடிகராகி உள்ளார். தெலுங்கிலும் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சமுத்திரக்கனி அளித்துள்ள பேட்டியில், ''நான் தற்போது தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்து இருக்கிறேன். ஜோடியாக அபிராமி நடித்துள்ளார். என் மனதுக்கு நெருக்கமான படம் இது. குழந்தை தத்தெடுப்பு குறித்தும் சட்டபிரச்சினைகள் குறித்தும் இந்த படம் பேசுகிறது.
தெலுங்கில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. பிரபாசுடன் ஸ்பிரிட் படத்திலும் நடிக்கிறேன். இதனால் தெலுங்கு மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டேன். நான் தெலுங்கு மொழி படித்ததை பார்த்து பவன் கல்யான் ஆச்சரியப்பட்டார்.
தெலுங்கு படங்களில் நடிக்கும்போது என்னை அக்கறையோடு கவனித்துக்கொண்டனர். தெலுங்கில் ப்ரோ படத்தை டைரக்டு செய்துள்ளேன். அதை பார்த்துவிட்டு சிரஞ்சீவி பாராட்டினார். அவர் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ் படமும் இயக்குவேன்'' என்றார்.