அனுஷா ஷெட்டியை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் நாகசவுரியா
|தெலுங்கு நடிகர் நாகசவுரியா தனது நீண்ட கால தோழியான அனுஷா ஷெட்டியை இன்று கரம்பிடித்து உள்ளார்.
புதுடெல்லி,
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாகசவுரியா. இவருக்கும், அவரது நீண்ட கால தோழியான அனுஷா ஷெட்டிக்கும் இடையே பெங்களூருவில் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடந்து முடிந்து உள்ளது.
திருமண ஜோடி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நாகசவுரியா, எனது வாழ்நாள் முழுமைக்கும் உரிய பொறுப்பை அறிமுகப்படுத்துகிறேன் என தலைப்பிட்டு உள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் பின்னணியில் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இந்த புகைப்படம் பகிரப்பட்டு ஒரு சில மணிநேரத்தில் அதனை லட்சக்கணக்கில் லைக் செய்து உள்ளனர். அவரது ரசிகர்கள் பலரும் திருமண ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன்னான மெகந்தி, மது விருந்து உள்ளிட்டவையும் பெங்களூருவில் நேற்று நடந்தது. கடைசியாக நாகசவுரியா நடித்து வெளியான கிருஷ்ணா விருந்தா விஹாரி திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றதுடன் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.