< Back
சினிமா செய்திகள்
தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்
சினிமா செய்திகள்

தமிழுக்கு வரும் தெலுங்கு நடிகர்

தினத்தந்தி
|
11 Nov 2022 2:19 PM IST

சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக ‘சிக்லெட்ஸ்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்துள்ள சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக 'சிக்லெட்ஸ்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை எம். முத்து டைரக்டு செய்கிறார். வலிமை படத்தில் நடித்துள்ள ஜாக் ராபின்சன் இன்னொரு கதையின் நாயகனாக நடிக்கிறார். நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஏ.ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது.

இன்றைய இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்