< Back
சினிமா செய்திகள்
சரத்குமார் நடித்துள்ள ஹிட்லிஸ்ட் படத்தின் டீசர் வெளியீடு
சினிமா செய்திகள்

சரத்குமார் நடித்துள்ள 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டீசர் வெளியீடு

தினத்தந்தி
|
19 Aug 2023 12:48 AM IST

'ஹிட்லிஸ்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் 'ஹிட்லிஸ்ட்'. இந்த படத்தை சூரியக்கதிர் மற்றும் கே.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள 'ஹிட்லிஸ்ட்' படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்