< Back
சினிமா செய்திகள்
பரத் நடித்துள்ள மிரள் படத்தின் டீசர் வெளியீடு
சினிமா செய்திகள்

பரத் நடித்துள்ள 'மிரள்' படத்தின் டீசர் வெளியீடு

தினத்தந்தி
|
7 Oct 2022 10:26 PM IST

இதனை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெட்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

சென்னை,

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் . ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெட்கட் பிரபு தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்