< Back
சினிமா செய்திகள்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படத்தின் டீசர் வெளியீடு
சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் டீசர் வெளியீடு

தினத்தந்தி
|
5 Jan 2024 9:41 PM IST

மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி’ திரைப்படம் உருவாகியுள்ளது.

சென்னை,

மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சாந்தகுமார், அடுத்ததாக 'ரசவாதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது 'ரசவாதி' படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகள்