< Back
சினிமா செய்திகள்
லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

'லால் சலாம்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
10 Nov 2023 8:12 PM IST

'லால் சலாம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 'லால் சலாம்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் (12-ந்தேதி) காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'லால் சலாம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்