< Back
சினிமா செய்திகள்
சேரன் நடித்துள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

சேரன் நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
23 Dec 2022 2:03 PM IST

சேரன் நடித்துள்ள 'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனரும் நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர், நடிகைகள் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சேரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்