< Back
சினிமா செய்திகள்
யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது
சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் 'போட்' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது

தினத்தந்தி
|
15 Dec 2023 9:52 PM IST

சிம்பு தேவன் 7 வருடங்களுக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

சென்னை,

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் 7 வருடங்களுக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'போட்' என பெயரிட்டுள்ளார். இதில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதை முழுவதுமாக கடலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 5 மொழிகளில் வெளியாகும் டீசரை தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் அமீர் கான், மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் சுதீப், தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் வெளியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்