< Back
சினிமா செய்திகள்
கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
2 Sept 2022 12:44 AM IST

நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'தும்பா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனசேகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்