< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் `மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் நாளை வெளியீடு
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் `மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு

தினத்தந்தி
|
28 May 2024 8:57 PM IST

விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்".

சென்னை,

ரோமியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்