< Back
சினிமா செய்திகள்
மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
7 Dec 2023 12:22 AM GMT

'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது.

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்