< Back
சினிமா செய்திகள்
பிரபு தேவா நடித்துள்ள பேட்ட ராப் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு
சினிமா செய்திகள்

பிரபு தேவா நடித்துள்ள 'பேட்ட ராப்' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Jun 2024 9:12 PM IST

'பேட்ட ராப்' படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை,

மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'பேட்ட ராப்' படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்