ஆசிரியர் தினம்: நடிகர் அஜித்தை குறிப்பிட்டு நடிகர் ஜான் கொக்கன் நெகிழ்ச்சி பதிவு..!
|ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்தை குறிப்பிட்டு நடிகர் ஜான் கொக்கன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி 'ஆசிரியர் தின விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜான் கொக்கன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு ஆசிரியர்களை கொடுத்துள்ளார். நாம் வாழ்வில் உயரவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதுபோல அஜித்குமார். எனக்கு மட்டுமன்றி, கோடிக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. என் வாழ்வில் வந்ததற்கும், நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார்!" என்று தெரிவித்துள்ளார்.