< Back
சினிமா செய்திகள்
Tamil people need a turn in their lives - a video released by actor Thadi Balaji
சினிமா செய்திகள்

தமிழக மக்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வரவேண்டும்-நடிகர் பாலாஜி வெளியிட்ட வீடியோ

தினத்தந்தி
|
25 Aug 2024 1:59 PM IST

நடிகர் பாலாஜி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல்தான் நமது இலக்கு என்றும் தெரிவித்தார். இந்த சூழலில், கடந்த 22-ம் தேதி கட்சி கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

'தமிழகத்தில் ஒரு மாற்றம் நிச்சயம் வரவேண்டும். தமிழக மக்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வரவேண்டும். அதற்கு நீங்க வரவேண்டும். எப்படி தமிழக வெற்றிக் கழகத்தில் கோடி கணக்காண தொண்டர்கள் இருக்கிறார்களோ, அவர்களின் எதிர்பார்ப்பும் இதுதான், அதில் நானும் ஒருவன், என்னுடைய எதிர்பார்ப்பும் அதுதான்.

2026 சட்ட மன்ற தேர்தலை நோக்கி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறீர்கள். வெற்றிகரமாக கொடி ஏற்றிவிட்டீர்கள். ரொம்ப சந்தோஷம். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கணும். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். இனிமே நீங்க உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம் நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்', இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்