< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'உலகின் சிறந்த நடிகர்களுக்கு தமிழ்நாட்டின் பதில்' - நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து
|1 Oct 2023 6:15 PM IST
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை."
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.