< Back
சினிமா செய்திகள்
ராயன் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
சினிமா செய்திகள்

'ராயன்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

தினத்தந்தி
|
24 July 2024 6:40 PM IST

'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ராயன்' திரைப்படம் வெளியாகும் 26-ந் தேதி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்