< Back
சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
சினிமா செய்திகள்

'இந்தியன் 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

தினத்தந்தி
|
11 July 2024 1:04 PM IST

'இந்தியன் 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'இந்தியன் 2' திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு லைகா புரொடக்சன்ஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் 'இந்தியன்' 2 படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 9 மணிக்கு 'இந்தியன் 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, கடைசி காட்சி அதிகாலை 2 மணிக்குள் முடிவடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்