நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
|நாளை (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்த ஒரு பார்வை.
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள தமிழ்ப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1. கொட்டுக்காளி: `கூழாங்கல்' திரைப்படம் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கதில் நடிகர் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
2. வாழை: மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் 'வாழை. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
3. நாற்கரப்போர்: வி6 பிலிம் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரித்த படம் 'நாற்கரப்போர்'. ஸ்ரீவெற்றி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அபர்ணதி நடித்துள்ளார்.
4. போகும் இடம் வெகுதூரமில்லை: மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'. இந்த படத்தில் நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
5. அதர்ம கதைகள்: காமராஜ் வேல் இயக்கிய ஒரு அதிரடி திரைப்படமாகும் . படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி , அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். ஏஆர் ரெய்ஹானா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .
6. சாலா: பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால் இயக்கும் படம் 'சாலா'. பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வபிரசாத் இப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீரன் நடித்துள்ளார்.