ஆஸ்கார் விருது பெற்ற கீரவாணி இசையில் தயாராகும் தமிழ் படம்
|அர்ஜூன் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'ஜென்டில்மேன்' படத்தின் இரண்டாம் பாகம் `ஜென்டில்மேன் 2' என்ற பெயரில் தயாராகிறது. ஏ.கோகுல் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் அதிக படங்கள் தயாரித்துள்ள கே.டி. குஞ்சுமோன் தயாரிக்கிறார். பட வேலைகள் தொடங்கி உள்ளன. நடிகர்-நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது.
இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற `நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்து ஆஸ்கார் விருதை பெற்ற கீரவாணி `ஜென்டில்மேன் 2' படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஐதராபாத் சென்று கீரவாணியிடம் கதையை சொல்லி முடித்ததும் `கதை பிரமாண்டமாக இருக்கிறது, அடுத்த மாதமே இசை கம்போசிங்கை ஆரம்பித்து விடலாம்' என்று தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் கீரவாணி தெரிவித்து உள்ளார். `இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறேன்' என்று கீரவாணியிடம் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்ததும், பதிலுக்கு `சூப்பர், வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார் கீரவாணி.