< Back
சினிமா செய்திகள்
வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படம் வேதா:  நடிகை தமன்னா
சினிமா செய்திகள்

வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படம் 'வேதா': நடிகை தமன்னா

தினத்தந்தி
|
4 Aug 2024 9:50 PM IST

'வேதா' படம் வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படமாகும் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

மும்பை,

இயக்குனர் நிகில் அத்வானியின் இயக்கத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம் 'வேதா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்திற்காக நிகில் அத்வானி 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்குனராக திரும்பி உள்ளார். அபிஷேக் பானர்ஜி, ஷர்வரி மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது.

ஜான் ஆபிரகாமின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'வேதா' படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை கவர்ந்தது. ஜான் ஆபிரகாம் ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டார், அதற்கு ஆபிரகாம் அவரை 'முட்டாள் ' என்று குறிப்பிட்டுள்ளார். இது அனைவரிடத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து 'வேதா' படத்தில் துணை வேடத்தில் நடிக்கும் தமன்னா பாட்டியா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, படத்தின் அட்டைப்படத்தை வைத்து மட்டும் வேதாவை மதிப்பிடாதீர்கள் என்று கூறினார். இது ஒரு ஆக்சன் படம் என்பதை விட, வித்தியாசமான கதையை ஆக்சன் காட்சிகள் மூலம் கூறும் படமாகும் என்று கூறினார்.

இந்தப்படம் இன்றைய அர்த்தமுள்ள சினிமா அனுபவங்களை எவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்துகிறது என்பதைக் காட்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடிகை தமன்னா ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . இந்தபடத்தில் எனது பங்களிப்பு சுமாரானது என்றாலும், அதன் வெளியீட்டைப் பற்றி நான் உண்மையிலேயே மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் செய்திகள்