< Back
சினிமா செய்திகள்
விமர்சனத்துக்கு தமன்னா பதிலடி
சினிமா செய்திகள்

விமர்சனத்துக்கு தமன்னா பதிலடி

தினத்தந்தி
|
5 Aug 2023 10:17 AM IST

ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகிய 2 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு தமன்னா ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

சிரஞ்சீவியுடன் நடித்துள்ள போலா சங்கர் தெலுங்கு படம் அஜித்குமாரின் வேதாளம் படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ளது.

இந்த நிலையில் வயதான இரண்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா எப்படி ஒப்புக்கொண்டார். வயது வித்தியாசம் அதிகம் உள்ளதே என்று வலைதளத்தில் சிலர் விமர்சித்தனர்.

இதற்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, "சினிமாவில் நடிகர்-நடிகைகள் இடையே வயது வித்தியாசத்தை எதற்காக பார்க்கிறீர்கள்? படத்தில் நடிக்கும் இருவரையும் கதாபாத்திரங்களாக மட்டும் பாருங்கள். வயது பற்றி பேச வேண்டுமானால் நான் 60 வயதிலும் டாம் குரூஸ் மாதிரி சாகசங்கள் செய்வேன். நடனமும் ஆடுவேன். அதுமட்டுமன்றி திறமையான சீனியர் நடிகர்களுடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்