2 படங்கள் வெளியாகும் மகிழ்ச்சியில் தமன்னா
|தமன்னாவுக்கு சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சிலர் பேசும்போதெல்லாம் வலுவான படங்கள் மூலம் திறமையை வெளிப்படுத்தி மீண்டும் வந்து நிற்பது வழக்கம். சமீப காலமாக தமன்னா நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ரஜினிகாந்துடன் தமன்னா நடித்துள்ள ஜெயிலர், சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள போலா சங்கர் ஆகிய 2 படங்கள் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது, "திரையுலகின் இரண்டு சிகரங்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹீரோக்கள் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடக்கும். ஆனால் கதாநாயகிகளுக்கு எப்போதாவதுதான் நடிக்கும்.
எனக்கு வந்த வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்டு 10-ந்தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்டு 11-ந்தேதியும் வெளியாக இருக்கிறது. இரண்டு சிகரங்கள் போன்ற நடிகர்களுடன் நான் நடித்துள்ள படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.