ஜப்பானின் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா நியமனம்...!
|ஜப்பானின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் 'காவாலா" பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜப்பானின் மிகப்பெரிய முன்னணி அழகு சாதன நிறுவனமான ஷிசிடோ-வின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் 'ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக இருப்பதில் பெருமை அடைகிறேன்..! ஷிசிடோ கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது..!' என்று பதிவிட்டுள்ளார்.