கேரள கோவிலில் தமன்னா- திலீப் சாமி தரிசனம்
|படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தமன்னா நடிகர் திலீப்புடன் கோட்டாரக்கரா கணபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள தமன்னா இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் குர்துந்தா, சீதா காலம், சிரஞ்சீவியின் போலோ சங்கர் மற்றும் இந்தியில் பப்ளி பவுன்சர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த தமன்னா முதல் தடவையாக மலையாள திரையுலகிலும் அடியெடித்து வைக்கிறார். அருண்கோபி இயக்கும் மலையாள படத்தில் திலீப் ஜோடியாக நடிக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது, ''நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தமன்னா நடிகர் திலீப்புடன் கோட்டாரக்கரா கணபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவரை காண கோவில் முன்னால் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை பார்த்து தமன்னா கையசைத்தார்.