< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'உங்கள் இதயத்துடன் பேசுங்கள், மேஜிக் நடக்கும்' - செல்வராகவன் வெளியிட்ட வீடியோ
|30 May 2024 10:36 PM IST
இயக்குநர் செல்வராகவன் பகிர்ந்துள்ள தன்னம்பிக்கை வீடியோ ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
சென்னை,
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' திரைப்படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் இந்த ஆண்டு தொடங்கும் என இயக்குனர் செல்வராகவன் அதிரடி அப்டேட் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னம்பிக்கை தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நம்மை பார்த்துக்கொள்ள மற்றவர்கள் வருவதில்லை, நமக்கு நாமே அமைதியை ஏற்படுத்த வேண்டும், சந்தோஷத்தை உண்டாக்கி கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். மேலும் உங்கள் இதயத்துடன் பேசுங்கள் மேஜிக் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.