< Back
சினிமா செய்திகள்
ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி - ராதிகா சரத்குமாருடன் தனது காமெடியை ரீகிரியேட் செய்த வடிவேலு...!
சினிமா செய்திகள்

'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி' - ராதிகா சரத்குமாருடன் தனது காமெடியை ரீகிரியேட் செய்த வடிவேலு...!

தினத்தந்தி
|
27 May 2023 11:50 AM IST

சந்திரமுகி-2 படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. காமெடி நடிகராக இருந்த இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் தனது ரீ என்ட்ரியை கொடுத்தார்.

அதைதொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்திலும், ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றும் பாடியுள்ளார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ராதிகா சரத்குமாருடன் தனது பேமஸ் டயலாக்கான 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்புட்ற மாதிரி' என்ற டயலாக்கை பேசி உள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும் செய்திகள்