50 வயதிலும் தபுவின் இளமை ரகசியம்
|50 வயதிலும் தபுவின் இளமை ரகசியத்தை அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் வந்தார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள். அழகின் ரகசியத்தை தபு வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''என் அழகின் உண்மையான காரணம் மனம் தான். மனதில் திருப்தி, சந்தோஷம், நிம்மதியான உறக்கம் இருந்தால் முகத்தில் அழகு தானாகவே வந்துவிடும். எவ்வளவு வயதானாலும் குறையவே குறையாது.
நான் ஒருமுறை அழகாக இருப்பதற்காக எனது மேக்கப் கலைஞரின் ஆலோசனையின் பேரில் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து முகத்தில் பூசக்கூடிய கிரீம் வாங்கினேன். ஆனால் அதை ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்தினேன். அதற்கு பிறகு அந்த கிரீமை உபயோகிக்கவே இல்லை. மனதை மகிழ்ச்சியாக வைத்தாலே அழகு வரும். எனக்கு இப்போதும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்புக்கு வாய்ப்பு உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்" என்றார்.