< Back
சினிமா செய்திகள்
சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் தாலி வெப்தொடரின் டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் தாலி வெப்தொடரின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
29 July 2023 5:01 PM IST

தாலி வெப்தொடரின் டீசரை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மும்பை,

1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

47 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகியுள்ள அவர், சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது சுஷ்மிதா சென் தாலி (Taali) என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார்.

இந்த டீசரை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

டீசர் சுஷ்மிதாவின் குரலுடன் தொடங்குகிறது, அதில் அவர் கண்ணாடியின் முன் தனது சேலையை சரிசெய்து கொண்டு, ஸ்ரீகவுரி சாவந்த் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.



மேலும் செய்திகள்