< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்..!
|22 July 2022 5:31 AM IST
டி.ராஜேந்தர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
சென்னை,
நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். சமீபத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். எனக்காக அன்பு காட்டிய தமிழக மக்கள் பிரார்த்தனையின் பலன் இது என்று கூறினார்.