`டெக்ஸ்டர்' -இருமொழிகளில் வரும் சஸ்பென்ஸ் படம்
|யாமினியை யாரேனும் கேலி செய்தால் அவர்களை அடித்து துவம்சம் செய்பவன் யாமினியின் காதலன் ஆதி. அவனை திரு மணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்ற முடிவுடன் யாமினி இருக்கும்போது, அவளை ஒருவன் கடத்தி கொடுரமாக கொலை செய்கிறான்.
யாமினியை கொலை செய்தவன் யார்? அவனை கண்டுபிடித்து ஆதி பழிவாங்கினானா? என்ற சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாகும் படத்துக்கு `டெக்ஸ்டர்' என்று பெயர் வைத்துள்ளனர். சூரியன்.ஜி டைரக்டு செய்கிறார். ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பிரகாஷ் எஸ்.வி. தயாரிக் கிறார்.
ராஜீவ் கோவிந்த் கதாநாயகனாகவும், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, அபிஷேக் ஜோசப் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அஷ்ரப், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களாக பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -ஆதித்ய கோவிந்தராஜ், இசை- ஸ்ரீநாத் விஜய்.