< Back
சினிமா செய்திகள்
ஐபிஎல் முன்னாள் தலைவருடன் திருமணமா..? லலித் மோடியுடனான உறவு குறித்து சுஷ்மிதா சென்
சினிமா செய்திகள்

ஐபிஎல் முன்னாள் தலைவருடன் திருமணமா..? லலித் மோடியுடனான உறவு குறித்து சுஷ்மிதா சென்

தினத்தந்தி
|
15 July 2022 7:03 PM IST

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், லலித் மோடியுடன் புதிய உறவைத் தொடங்கியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.

மாலத்தீவு, இத்தாலியின் சார்டினியா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு தற்போது லண்டன் வந்திருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் இடையே நேற்று மாலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டது. நிஜத்தில் அல்ல, சமூக வலைதளமான டுவிட்டரில் தான் இது அரங்கேறியுள்ளது.

மேலும், சுஷ்மிதா சென் தன்னில் பாதி என்றும், இன்னும் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி ஊடகங்களுக்கு சென்றதும், முதல் டுவீட் செய்த அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர் இது குறித்த விளக்கத்துடன், இரண்டாவது டுவீட்டை பதிவு செய்தார். அதில் எழுதப்பட்டுள்ளதாவது - எங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை, நாங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்கிறோம். எங்கள் திருமணம் விரைவில் நடக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஷ்மிதா சென், தான் தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக் கொள்ளவில்ல என்று தெரிவித்துள்ள அவர், நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், எனவே, இனி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வேலையை கவனிக்க வேண்டும் என்றும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருக்கிறார்.

மேலும் செய்திகள்