முன்னாள் காதலருடன் விருந்தில் கலந்து கொண்ட சுஷ்மிதா சென்
|சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன் என லலித் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
மும்பை
சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். நடிகை சுஷ்மிதா சென், தன்னுடைய 24 வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்து தாயானார்.
சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
தன்னைவிட 16 வயது குறைந்த ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.ஆனால் நீண்டகால உறவு முடிவுக்கு வந்து விட்டது என அவரை பிரிந்தார்.
'என் வாழ்வில் சில ஆண்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அதில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்' என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், 58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் இருந்தது என தனது சமூக வலைதளத்ததில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
`சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன்.சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி இருந்தார்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் தனது அம்மா சுப்ரா சென்னின் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதற்காக நேற்றிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் சுஷ்மிதா. இந்த விருந்தில் ரோமன் ஷால் பங்கேற்றிருந்தார். இருவரும் பிரிந்திருந்த நிலையில் ரோமன் திடீரென பார்ட்டியில் பங்கேற்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லலித் மோடி சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக அறிவித்த பிறகு இருவரும் அமைதியாகவே உள்ளனர். அதன் பிறகு இருவரின் தரப்பில் இருந்தும் எந்த தகவலும் வரவில்லை இந்நிலையில் சுஷ்மிதா சென் தனது பழைய காதலரை மட்டும் பார்ட்டிக்கு அழைத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக லலித் மோடியுடன் பிரேக் அப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.