< Back
சினிமா செய்திகள்
சர்வதேச பட விழாவில் வரவேற்பை பெற்ற சுசி கணேசன் படம்...!
சினிமா செய்திகள்

சர்வதேச பட விழாவில் வரவேற்பை பெற்ற சுசி கணேசன் படம்...!

தினத்தந்தி
|
16 Sept 2023 9:54 AM IST

டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘தில் ஹை கிரே' தேர்வு செய்து திரையிடப்பட்டது.

தமிழில் பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுசி கணேசன் தற்போது ஊர்வசி ரவுத்தேலா, வினீத்குமார், அக்ஷய் ஓபராய் நடித்துள்ள 'தில் ஹை கிரே' இந்தி படத்தை டைரக்டு செய்துள்ளார்.

இந்த படம் டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக தேர்வு செய்து திரையிடப்பட்டது. "தில் ஹை கிரே" படத்தை பார்த்த பலரும் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் சுசி கணேசன் பேசும்போது, "இந்தப் படத்துக்கு உலக சினிமாக்களின் பிரபலமான பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. கைதட்டல் சத்தத்தில் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்து போய்விட்டது'' என்றார்.

ஊர்வசி ரவுத்தேலா பேசும்போது, "ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு கிடைத்த அபாரமான பாராட்டுகளுக்காக எனது மகத்தான நன்றி'' என்றார். சுசி கணேசனுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்