கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்
|கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய மகனுக்கு மேடையில் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் சூர்யா.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக சூர்யா மற்றும் ஜோதிகா இருந்து வருகின்றனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தேவ் மற்றும் தியா என இரு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் கணவரும் மனைவியும் சேர்ந்து உடற்பயிற்சி செய்த வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின. உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இருவரும் ஜோடி போட்டு நடிக்காத நிலையில், ஜோதிகா தனது உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றி வருவதற்கு காரணமே மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கத்தான் எனக் கூறுகின்றனர். சூர்யாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட்டை நடிகர் சூர்யாவின் மகன் தேவ் வாங்கியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு தனது மகனையும் தனது மகனுடன் படிக்கும் அவனது நண்பர்களையும் பிளாக் பெல்ட் வாங்கிய சக போட்டியாளர்களையும் ஊக்குவித்து பாராட்டியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.