< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்துடன் மோதும் சூர்யா விஜய்சேதுபதியின் பீனிக்ஸ் படம் !
சினிமா செய்திகள்

'கங்குவா' படத்துடன் மோதும் சூர்யா விஜய்சேதுபதியின் 'பீனிக்ஸ்' படம் !

தினத்தந்தி
|
13 Oct 2024 7:48 AM IST

சூர்யா விஜய்சேதுபதியின் 'பீனிக்ஸ்' படம் வருகிற நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள 'பீனிக்ஸ்' படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது. புதிதாக நாயகனாக அறிமுகமாகும் போதே நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகி மோத உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்