சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? - ஜோதிகாவின் பதில் என்ன?
|ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை பதிவிட்டார்.
சென்னை,
நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோகளையும் பதிவிடுவார்.
இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை கமெண்ட் செய்துள்ளார் .
சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் செய்தீர்களோ அதேபோல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சாரின் மிக பெரிய பேன்" என்ற கமெண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கமெண்டிற்கு "ஊப்ஸ், வாய்ப்பில்லை" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 -ம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். ஐஷு என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார்.
ஆனால் அக்காதல் கைகூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமெண்ட் செய்து இருக்கிறார்.