< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் காயம்..  ஓய்வெடுப்பதற்காக மும்பை சென்றார் சூர்யா
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் காயம்.. ஓய்வெடுப்பதற்காக மும்பை சென்றார் சூர்யா

தினத்தந்தி
|
27 Nov 2023 4:38 PM IST

சூர்யா சென்னை விமான நிலையத்தில் தனது மனைவியுடன் செல்லும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் 'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுப்பதற்காக மும்பை சென்றுள்ளார் சூர்யா. மும்பை செல்வதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் தனது மனைவியுடன் செல்லும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்