வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா
|இந்த கதாபாத்திரத்துக்காக சூர்யா பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேக்கப்பை கலைக்கவும் அதிக நேரம் ஆகிறதாம்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறி இருக்கிறது. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் 3 டி தொழில் நுட்பத்தில் பத்து மொழிகளில் தயாராகிறது. இதில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். குதிரையில் செல்லும் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகிறது. இந்த கதாபாத்திரத்துக்காக சூர்யா பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேக்கப்பை கலைக்கவும் அதிக நேரம் ஆகிறதாம்.
அடுத்த வருடம் கங்குவா படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாவதாக டைரக்டர் சிவா தெரிவித்து உள்ளார். கங்கு என்றால் நெருப்பு என்றும் நெருப்பின் மகன் என்ற அர்த்தத்தில் படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இந்த படத்தை எடுக்கிறனர். இதில் சூர்யா ஜோடியாக திஷாபதானியும், வில்லனாக பாபி தியோலும் நடிக்கின்றனர். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட மேலும் பலரும் நடிக்கின்றனர்.