சரித்திர கதையில் நடிக்கும் சூர்யா?
|சிவா இயக்கத்தில் சரித்திர கதையொன்றில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இதற்கான கதை தயாராகி விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
சரித்திர கதையம்சம் கொண்ட படங்கள் பக்கம் திரையுலகினர் பார்வை திரும்பி உள்ளது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் வந்தது. இதன் அடுத்த பாகம் தயாரான நிலையில் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளது. விஜய்யின் புலி படம் சரித்திர படமாக வந்தது. விஜய்யை வைத்து சரித்திர கதை இயக்குவேன் என்று சசிகுமார் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின் சிங்கம் படம் வந்தது. இந்தியில் அதிக சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் பல மொழிகளில் வெளியான கே.ஜி.எப். முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் திரையுலகின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. சூர்யாவும் சரித்திர கதையில் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் சிவா இயக்கத்தில் சரித்திர கதையொன்றில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இதற்கான கதை தயாராகி விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. பாகுபலி, பட பாணியில் இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.