< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆஸ்கார் அகாடமியின் அழைப்பை ஏற்றுகொண்டார் சூர்யா
|29 Jun 2022 9:26 PM IST
ஆஸ்கார் அகாடமியின் அழைப்பை சூர்யா ஏற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை,
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா ,இந்தி நடிகை கஜோல் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்கார் அகாடமியின் அழைப்பை சூர்யா ஏற்றுக்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
அழைப்பிற்காக, நன்றி ஆஸ்கார் அகாடமி நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்த எப்போதும் பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.