< Back
சினிமா செய்திகள்
சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
28 Jan 2023 4:33 PM GMT

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

சென்னை,

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த தகவலால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

மேலும் செய்திகள்