அறுவைச்சிகிச்சையில் பிழைப்பேனா? பிரபல நடிகர் பாலா வீடியோவில் உருக்கம்
|பிரபல நடிகர் பாலா. இவர் தமிழில் அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அம்மா அப்பா செல்லம், காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக வந்தார். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிகப்படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.
பாலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பாலா உருக்கமாகப்பேசி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ''என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் எனக்குப்பெரிய அறுவைச் சிகிச்சை நடக்க உள்ளது. இந்த அறுவைச்சிகிச்சையின்போது எனக்கு மரணம் கூட நேரிட வாய்ப்பு உள்ளது. உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிறப்போ இறப்போ கடவுள் முடிவு செய்வார்'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகிறார்கள்.