சூர்யாவின் கஜினி 2-ம் பாகம் வருமா?
|ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூர்யாவின் கஜினி, விஜய்யின் துப்பாக்கி ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் வசூல் சாதனை நிகழ்த்தின. கஜினி இந்தியில் அமீர்கான் நடிக்க ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.
கஜினி, துப்பாக்கி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும்படி ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறர்கள். இதில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் உள்ளது என்று முருகதாஸ் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இதுபோல் கஜினி 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "கஜினி படம் தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் அதிக வசூல் ஈட்டியது. கஜினி படத்தில் அசின் நடித்த கல்பனா கதாபாத்திரம் இறந்துவிட்டது. சூர்யா கதாபாத்திரமும் நினைவு மறதியாக இருக்கிறது.
எனவே கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. என்னிடம் வேறு நிறைய கதைகள் உள்ளன. புதுமையான கதையொன்றை படமாக எடுப்பேன்'' என்றார்.