< Back
சினிமா செய்திகள்
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

தினத்தந்தி
|
11 July 2022 9:36 PM GMT

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு 'சூர்யா 41' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'வணங்கான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடன் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்