குதிரை சவாரி பயிற்சி செய்த சூர்யா: 44-வது படத்திற்காகவா?
|44-வது படத்திற்காக சூர்யா குதிரை சவாரி பயிற்சி செய்திருக்கலாம் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
சென்னை,
கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது சூர்யாவின் 44-வது படமாகும். அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்தது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் தற்போது சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா குதிரை சவாரி பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து இந்த பயிற்சி சூர்யா 44 படத்திற்காக இருக்கலாம் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.